ENNAR
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பிச்சாவரம் ஜமீன் கதை

Go down

பிச்சாவரம் ஜமீன் கதை  Empty பிச்சாவரம் ஜமீன் கதை

Post  Admin Mon Feb 25, 2019 2:50 pm

1) களப்பிர அரசனான கூற்றுவ நாயனார் தில்லை வாழ் அந்தணர்களை முடிசூட்ட வேண்ட அவர்கள் சோழர்க்கன்றி சூட்டோம் முடி என மறுத்தது தெளிவாகிறது.

2) தில்லை வாழ் அந்தணரால் முடி சூட்டப்படும் பேறு பெற்ற ஒரு குடும்பத்தினர் இன்றும் சிதம்பரம் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

3) இந்த சோழனார் மரபில் கி.பி 1844 -இல் இரத்தினசாமி சூரப்ப சோழனார் பிறகு இராமபத்திர சூரப்ப சோழனார், கி.பி. 1911 -இல் தில்லைக்கண்ணு சூரப்ப சோழனார், 1943 – இல் ஆண்டியப்ப சூரப்ப சோழனார், பின்பு 1978 – இல் சிதம்பரநாத சூரப்ப சோழனார் முதலானோர் நடராசர் திருமுன் பட்டம் புனைந்திருக்கிறார்கள்.

4. இங்கு மற்ற இனத்தவர் பட்டம் கட்ட முடியாது. // இது தான் வன்னியர்கள் சோழர்கள் என்று சொல்ல காரணம். அதற்கு விளக்கம்

1. களப்பிர அரசன் (காலம் கி.பி 300) – வைதீக எதிர்ப்புச் சமயமாகிய பெளத்த சமயத்தவர்களாக இருந்தார்கள், இவர் சைவத்தை ஆதரிக்க வில்லை, இவர் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற கருத்தும்உண்டு (களப்பறையர் என்று அழைக்கபடுபவர்களே அன்று களப்பிரர் எனப்பட்டனர் என கருத்தும்உண்டு : ஆதாரம் விக்கி ) அதனால் அந்தணர்கள் இவர்களுக்கு முடி சூட்டப்படாது தவிர்த்திருக்கலாம்.
அதனால் சோழர்க்கன்றி சூட்டோம் முடி என மறுத்திருக்கலாம்.

2) அப்போது உள்ள அந்தணர்கள் காலம் (கி.பி 300 ) இப்போது உள்ள தில்லை வாழ் அந்தணரால் காலம் ( கி.பி 1800) கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளுக்கு பிறகு உள்ள இவர்கள் அதே அந்தணர்களா? (இப்பொழுது உள்ள அந்தணர்கள் கோவில் தங்களது என்று பொய்யாக வழக்கு போட்டதை எல்லோரும் அரிந்ததே). நிர்வாகம் சோழனுக்கு பிறகு பல பேரிடம் போய் 18ஆம் நூற்றாண்டில் இவர்களிடம் வந்தது, ஆதாரம் கீழே

3) கி.பி 1844 முன்பாக இவர்கள் யாருக்கும் முடி சூட்டவில்லை மேலாக சோழனாரே தம்மை இரண்யவர்ம பல்லவன் வழியினர் என்று கூறுகிறார். 1844 ஆண்டுகளுக்கு முன் யாருக்கும் கட்டப்பட்ட ஆதாரம் இல்லை.

4) வெள்ளையர் காலத்தில் அந்த அந்த பகுதியில உள்ள ஜமீன்களே அங்குள்ள கோயிலுக்கு முடி சூட்டப்படும் உரிமையைப் பெற்றார்கள். அதர்க்கு உதாரணம் இப்பொழுது தஞ்சை கோவிலில் மராட்டிய சரோபோஜி வாரிசுக்கும், கள்ளழகர் கோவிலில் கள்ளர்களுக்கு, பட்ட மங்கலம் மற்றும் பாகநேரிநாடு போன்ற கள்ளர் நாடு அம்பலகாரர்களுக்கு தான் இன்றும் பட்டம் கட்டுவதை கான முடிகிறது. இது போல தான் பிச்சாவரம் ஜமீன்களுக்கும்
(என்னார் கல்வெட்டில் சூரப்ப கோனார் என வருகிறதே,சோழனாரே தம்மை இரண்யவர்ம பல்லவன் வழியினர் என்பதனாளா?)

கி.பி.14_ஆம் நூற்றாண்டுத் தொடக்-கத்தில் மாலிக்காபூர் படையெடுத்த-போது நிகழ்ந்த கலவரத்தில் கி.பி. 1311 முதல் 76 ஆண்டுகள் சிதம்பரத்தில் பூசை இல்லை. நடராசர் கோயிலை விட்டு வெளியேறி ஒரு பெரிய புளியமரப் பொந்தில் இருந்தார். இரண்டாம் அரிகரனின் அமைச்சர் முத்தய்யத் தண்டநாயகன் மீண்டும் நடராசரைச் சிதம்பரத்திற்குக் கொண்டு வந்து பூசைக்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்தார். இதனைச் சோழ மண்டல சதகம் என்ற நூல் மிகத் தெளிவாகக் கூறுகிறது (பாடல் எண் 99).
கோயில் கல்வெட்டும் இதனைத் தெரிவிக்கிறது.

1610_ஆம் ஆண்டு லிங்கமநாயக்-கர் என்ற வீரசைவர் அளித்த உதவியால் கும்பகோணம் சைவ வேளாளர் சிவப்பிரகாசர் என்பவர் சிதம்பரம் கோயில் பரா-மரிப்பையும் நிர்வாகத்தை-யும் மேற்கொண்டார்.

கி.பி. 1648 வரை துறையூர்ப் பாளையக்காரர் ரெட்டி-யார்களின் நிர்வாகத்தில் கோயில் இருந்தது.

பீஜப்பூர் சுல்தான் படைத் தாக்குதலில் 24.12.1648 லிருந்து குடுமியாமலையில் 40 மாதம் நடராசர் இருந்தார். அங்கு பாதுகாப்புக் குறைவு ஏற்பட்டதால் நடராசரை மதுரைக்குக் கொண்டு சென்று 37 வருடம் 10 மாதம் 20 நாட்கள் வைத்திருந்தனர்.

மராட்டியர் ஆட்சி நடை-பெற்றது. தஞ்சையில் ஆட்சி செய்த வீர சிவாசியின் மூத்த மகன் தன் சிறிய தந்தையார் மகன் சகசி உதவியோடு மதுரையி-லிருந்து நடராசரை சிதம்பரம் கொண்டு வர ஏற்பாடு செய்தார். 21.11.1684 (இச்செய்திகள் திருவாரூர்க் கோயிலி-லிருந்து மைய அரசின் தொல்லியல் துறை படியெடுத்த 4 செப்பேடுகளில் விரி-வாகக் கூறப்படுகிறது.

21.1.1711 – வேளூர் அம்பல-வாணத் தம்பிரான் என்பவரிடம் நிர்வாகம் இருந்தது

19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் 20 ஆம் நூற்றாண்டின் இடைப்-பகுதி வரை சிதம்பரத்தை அடுத்துள்ள பிச்சாவரம் சமீன்தார்கள் நிருவாகத்தில் சிதம்பரம் கோயில் இருந்துள்ளது.

மூவர் தமிழ்த் தேவாரப் பாடலைச் சிற்றம்பல மேடையில் பாடக்கூடாது என்று தீட்சிதர்கள் தடுத்தனர். வடமொழிக்கு நிகராகத் தமிழ் இருக்கக் கூடாது என்றனர்.

ஆதாரம் சொன்னவர்:
புலர் செ.இராசு எம்.ஏ., பிஎச்.டி.,
முன்னாள் தலைவர்
கல்வெட்டியல் – தொல்லியல் துறை

Admin
Admin

Posts : 15
Join date : 24/07/2011
Age : 70
Location : P.U.C.

https://ennar.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum