ENNAR
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஆதித்த காரிகாலன்

Go down

ஆதித்த காரிகாலன் Empty ஆதித்த காரிகாலன்

Post  Admin Mon Jul 15, 2013 10:29 am

இதோ உங்களுக்காக ஒரு தகவல். நீங்கள்அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படித்திருக்கிறீர்களா?

படித்திருந்தால் நான் மேலே சொல்லப் போவது உங்களுக்கு நன்றாக புரியும்.

இல்லையென்றாலும் பரவாயில்லை.

இத்தகவல் சுவாரசியமாகவே இருக்கும். இன்றைக்குச் சுமார் ஆயிரத்து நாற்பது வருடங்களுக்கு முன்னால் சுந்தர சோழன் என்ற மன்னன் ஆட்சி புரிந்து கொண்டிருந்தான்.

அவருக்கு மூன்று குழந்தைகள். மூத்தவன் ஆதித்த கரிகாலன், அவன் பட்டத்து இளவரசன்.
அவனுடைய தங்கை குந்தவை, இளையவன் அருமொழி. ஆதித்தகரிகாலன் பாண்டியர்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டு, வீரபாண்டியன் தலையைக்கொய்து அவனைக் கொன்று விடுகிறான்.

பிறகு சதிகாரர்கள் சிலர் ஆதித்தகரிகாலனைச் சூழ்ச்சியால் கொன்றுவிடுகிறார்கள்.

சுந்தரசோழரின் ஆட்சிக்குப்பிறகு, அவரின் பெரிய தந்தையின் மகனான உத்தம சோழன் ஆட்சிக்கு வருகிறான்.
அதற்கு பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆதித்த கரிகாலனின் தம்பி அருமொழி, இராஜராஜசோழன் என்ற பெயரில் அரியணையில் அமர்கிறான்.

அதாங்க தஞ்சாவூர் பெரிய கோயிலான இராஜராஜீசுவரம் கோயிலைக் கட்டிய இராஜராஜ சோழன்தான்.

இராஜராஜனின் 2ம் ஆட்சியாண்டில், ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த துரோகிகளான ரவிதாஸன், சோமன் சாம்பவன் மற்றும் சிலர், அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது கதையல்ல நிஜம்.

காட்டுமன்னார்கோயில் என்று இன்று வழங்கப்படும் உடையார்குடி என்ற இடத்தில் உள்ள கோயிலின் பின் சுவரில் இந்த விஷயம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

இதில் கவனிக்கவேண்டிய விஷயங்கள் பல உள்ளன.

ஆதித்த கரிகாலன் கொலையுண்ட பிறகு உத்தம சோழனின் ஆட்சி வருகிறது.

அப்பொழுதெல்லாம் கொலையுண்டவர்கள் பிடிபடாமல், 16 வருடங்கள் கழித்து, இராஜராஜன் ஆட்சிக்கு வந்த பிறகுதான் தண்டிக்கப்படுகிறார்கள்.

அதனால், உத்தம சோழனுக்கும் இந்தச் சதியில் பங்கிருக்கலாம் என்ற சந்தேகம் வருகிறது.

கல்வெட்டில் துரோகிகள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கொலை செய்தவர்கள் பாண்டியர்களோ இல்லை சேரர்களோ என்றால் எதிரிகள் என்று தானே வர வேண்டும்? துரோகிகள் என்று யாரைக் குறிப்பிடுவார்கள்?
கூடவேஇருந்து குழி பறிப்பவர்களைத்தானே? இரவிதாஸனும், அவன் கூட்டாளிகளும் சோழ நாட்டிலேயே மிக உயர்ந்த பதவிகளில் இருந்தவர்கள் தான். பொன்னியின் செல்வனில் கல்கி இரவிதாஸன் கூட்டாளிகளை "பாண்டிய ஆபத்துதவிகள்" என்று குறிப்பிட்டது கற்பனை என்றாலும், அப்படிப்பட்ட பெயருடன் இருந்தவர்கள் சோழ நாட்டில் இருந்ததும், அவர்கள் ஆதித்தனைக் கொலை செய்ததும் உண்மை செய்திகளே.

கல்கிக்கும் வரலாற்றிலும், கல்வெட்டுகளிலும் ஆர்வம் இல்லாதிருந்தால், பொன்னியின் செல்வன் போன்றதொரு காவியம் இன்று நமக்குக் கிடைத்திருக்குமா?


வரவணையான் பதிவு பார்த்தபின் அந்தப்பதிவில் உள்ள கரிகாலசோழன் பற்றிய ஆவல் அதிகமாகி
இணையத்தில் தேடியபோது வரலாறு.கொம்மில் மா. இலாவண்யா வால் எழுதப்பட்டதை பகிர்கிறேன்.

அதில் அவர் கதை மாந்தர்களை படைத்தவிதம். 1 அனிருத்த பிரும்மராயன் என்ற பார்ப்பனர் சுந்தரசோழன் அமைச்சராக இருந்திருக்கிறார். இதுவும் வரலாற்று உண்மைதான் அன்பில் செப்பேடுகள் இதை உரைக்கின்றன. அவருக்கு சுந்தரசோழன் பல ஊர்களை பிரம்ம தேயமாகவும். இறையிலி நிலமாகவும் அளித்ததையும் அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன. ஆனால் அவர் அதை மறைத்துவிட்டார். மேலும் அனிருத்த பிரும்மராயன் அவர்களை "பூஜை புனஸ்காரம், ஜபதபம், நியம நிஸ்டைகள் இவற்றில் உயர்ந்தவராகவும். எல்லாம் தெரிந்த, பக்தி மிக்க, உன்னத புருடராகவும் படைத்துள்ளார். அது செல்க. தன் இனத்தாரை உயர்த்தி சொல்லுவது மனிதவழக்கம் என்று விட்டு விடலாம். அதைப்போன்றே அருண்மொழிவர்மன், குந்தவை மதுராந்தகன் போன்ற வரலாற்று மனிதர்களையும் உத்தமபுத்திரர்களாகப் படைத்துள்ளார். ஆனால் ஆதித்தகரிகாலனை தொடக்கம் முதல் சினம் மிக்கவன் ஆகவும் பெரியோரை மதிக்காதவன் போலவும் படைத்துள்ளார். அதற்கு ஏதேனும் சான்றுகள் உள்ளனவா?
ஆவேசமும் மூர்க்கக் குணம் மட்டுமின்றி, ஒரு பெண் பித்தன் என்பது போலவும் படைத்துள்ளார். அவனை மட்டும் அல்ல அவனது நண்பனாகிய பார்த்திபேந்திர பல்லவன் என்ற பல்லவ வழிவந்த இளவரசனையும் அதைப்போன்றே படைத்துள்ளார். இவனும் வரலாற்று மனிதனே பல கல்வெட்டுகள் பார்த்திபேந்திரபல்லவன் தொண்டை நாட்டில் ஆட்சி செய்ததற்கு சான்று அளிக்கும். அவனும் கோவில்கள் முதலியவற்றிற்கு நன்கொடை அளித்தவன்தான். ஆதித்தகரிகாலனும் அவனுடைய காலத்திய அதிகாரிகளும் கோவில்களுக்கும். பார்ப்பனர்களுக்கும் கொடை அளித்த மன்னர்கள் தான். ஆயினும் அவர்கள் பாத்திரப் படைப்பை அப்படி அமைத்தற்கு காரணம் என்ன?
ஆதித்த கரிகாலன் ஒரு கொடியவன். வீரபாண்டியனின் தலையைக் கொய்த அறம் கொன்ற செய்கை புரிந்தவன் என்று அமைத்து அவன் கொலை செய்யப்பட வேண்டியவனே என்ற முடிவிற்கு படிப்பவர்களை இட்டு செல்லும் நோக்கம் இருந்திருக்கவேண்டும். பொன்னியின் செல்வன் புதினத்தைப் படிப்பவர்கள் யாருக்கும் ஆதித்த கரிகாலன் மீது சிறிதளவும் அன்போ அல்லது பரிவோ ஏற்பட்டு விடாதவாறு அக்கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் கதையின் வில்லன் அவன் என்று சொன்னால் அது மிகையாது. அவ்வளவு தூரம்மெனக்கட்டு ஆதித்த கரிகாலனை இழிவுபடுத்துவதற்குக் காரணம் அவனைக் கொலை செய்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தை படிப்பவர்கள் நடுவில் விதைப்பதற்கே.
ஏன்? ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் அனைவரும் பார்ப்பனர்களே. ஆனால் இந்த உண்மையை கல்கி வெளிப்படையாக சொல்லவில்லை மறைவாகவும் சொல்லவில்லை. அவருக்கு ஒரு வேலை தெரியாதோ என்று நாம் எண்ணிவிடக் கூடாது. ஏனெனில் அவர் ஆதித்த கரிகாலனைக் கொல்லுவதற்கு [சோழகுலம் முழுவதையுமே அழிப்பதற்கு என்று கல்கி வர்ணித்துள்ளார்] என்று திட்டம் தீட்டியவர்கள் என்ற பெயரில் அவர் குறிக்கின்ற ஆட்களின் பெயர்கள் எல்லாம் உண்மையானவை. சோமன், ரவிதாசன், பரமேஸ்வரன், ரேவதசக் கிரம வித்தன் போன்ற பெயர்களை உடையவர்கள் சோழ நாட்டிற்கு எதிராக சதி செய்தனர் என்று கல்கி எழுதுகிறார். அவர்கள் திட்டங்கள் அனைத்தையும் ஒரு துப்பறியும் நாவலுக்கு இணையான சாகசத்தோடு கொண்டு சொல்லுகிறார். ஆனால் அவர் சொல்லாமல் ஒளித்தது அவர்கள் அனைவரும் பார்ப்பனர்களே என்ற உண்மையை மட்டும்தான்.
உடையாளூர்க் கல்வெட்டு ஆதித்த கரிகாலனைக் கொன்ற மேற்சொன்ன அனைவரும் பிரும்மாதிராயன் [சோழ நாட்டுப் பார்ப்பனர்களுக்கு வழங்கப்படும் விருதுப் பெயர்] பஞ்சவன [பாண்டிய நாட்டுப் பார்ப்பனர்களுக்கு வழங்கப்படும் விருதுப் பெயர் ] என்று கல்லில் இட்ட எழுத்துப் போல் அடித்துச் சொல்லுகிறது. ஆனால் கல்கி அவர்கள் மீது பார்ப்பன வாடையே அடிக்காத அளவிற்கு அவர்களைப் படைத்துள்ளார். படிப்பவர்கள் யாருக்கும் அவர்கள் மந்திரவாதிகள், ஒற்றர்கள், இழிகுலத்தோர் என்றுதான் தோன்றும். அவர்கள் பார்ப்பன சாதியினராய் இருப்பரோ என்ற எண்ணம் அணு அளவும் மனதில் தோன்றாது. அப்படிப்பட்ட நேர்த்தியான கை வேலை.
அனிருத்த பிரும்மராயன் என்ற வரலாற்று மனிதனை அவன் சாதியுள்பட வெளிக்காட்டி எழுதிய கல்கி, சோமன், ரவிதாசன், பரமேஸ்வரன், ரேவதாசக் கிரம வித்தன் போன்ற வரலாற்றுக் குற்றவாளிகளை வேற்று சாதியினர் போல் படைத்துள்ளார். உடையாளூர்க் கல்வெட்டுகள் அவர்கள் அனைவரும் பார்பபனர்கள் என்று எழுதி உள்ளதை மறைத்துவிட்டார். பெயர்களை மட்டும் எடுத்துக் கொண்டு சாதியை மறைத்துவிட்டார். என்ன காரணம்? தன்னுடைய சாதியின் நற்பெயரைக் காப்பற்றுவதுதான். வரலாற்றில் கல்வெட்டில் தன் சாதியைப் பற்றி கூறப்பட்டுள்ள உண்மைகள் வெகுசன மக்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்று வெகு அக்கறையாக அவர்களின் சாதியை மறைத்துவிட்டார். என்னே அவர் கைவண்ணம்! இனப்பற்று! நேர்மை!
நமக்குத் தெரிந்த அளவிலேயே மறைப்பு வேலைகள் நடக்கின்றன. தெரியாமல் நடந்தது எவ்வளவு இருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே தலையைச் சுற்றுகிறது.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12831&Itemid=139

Admin
Admin

Posts : 15
Join date : 24/07/2011
Age : 70
Location : P.U.C.

https://ennar.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum