ENNAR
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கள்வன் / கள்வர் / கள்ளன் / கள்ளர் / கல்லன் /களவர் / களபர் என்று அழைக்கப்பட்ட அரசர்கள்

Go down

கள்வன் / கள்வர் / கள்ளன் / கள்ளர் / கல்லன் /களவர் / களபர்  என்று அழைக்கப்பட்ட அரசர்கள்  Empty கள்வன் / கள்வர் / கள்ளன் / கள்ளர் / கல்லன் /களவர் / களபர் என்று அழைக்கப்பட்ட அரசர்கள்

Post  Admin Sat Aug 29, 2020 4:51 pm

கள்வர் கள்வன் என்று அழைக்கப்பட்ட அரசர்கள் :




      (ஸ்ரீ கள்வன் ராஜராஜ சோழ தேவர் )

சோரன் மருவி  சோழன்  ஆனது (சோழன் > சோடன் > சோரன்) / களப்படை கொண்ட வீர சோழன் கல்வெட்டும் / கள்ளப்பற்று மூலம் 30,000 காசுகள் வசூலித்துக் மன்னார்குடி கோயிலுக்குக் தந்த சோழமண்டலத்தின் சக்கரவர்த்தி  இராசாதி இராச சோழனும்.  இப்படி களப்படை , கள்ளப்பற்று , கள்ளர் என்ற சொற்கள் ஒரு உயர்ந்த சொல்லாக விளங்கியது.

வெட்சி மறவரை ஆறலைப்பார், கள்வர் எனவும் கரந்தை மறவரைவயவர், மீளியர் எனும்பெயர்களில் அழைப்பர்.

1) சங்ககால மாமன்னன் புல்லி என்பான் வேங்கடத்தை ஆண்டவன். இவனது சிறப்புபெயர் " கள்வர் கோமான்"

2) " கள்வர் கள்வன் பெரும் பிடுகு முத்தரையன் செந்தலைக் கல்வெட்டு" திருக்காட்டுப்பள்ளி - செந்தலைதூண் கல்வெட்டு “வல்லக்கோன், தஞ்சைக்கோன் ஸ்ரீ கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையன்.” எனவும் குறிப்பிடுகின்றன.

3) “ வினைநவில் யானை விறற்போர்க் தொண்டையர் இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட் டோங்கு வெள்ளருவி வேங்கடத் தும்பர்” (அகம்.)
என வேங்கடமலைப்பகுதியை ஆண்ட தொண்டைமானைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.

4)“ கள்வர் பெருமகன் – தென்னன்”

" கள்வர் கோமான் தென்னவன்” என அகநானூறு பாண்டிய மா மன்னனையும்

5) "இவனென் னலங்கவர்ந்த கள்வ னிவனெனது நெஞ்ச நிறையழித்த கள்வனென்" என முத்தொள்ளாயிரம் சேர மா மானைப் பற்றியும்

6) "மடல்சூழ்ந்த தார்நம்பி யிடங்கழிக்கும்” (சுந்தரர் திருத்தொண்டர்தொகை)

7) "கோனாட்டுக் கொடும்பாளூர் வேளிர் குலத்து அரசன்
ஆதித்தன் புகழ் மரபிற்குடி முதலோன்”(சேக்கிழார்-பெரியபுராணம் பக்.491) ( கள்ளன் ஆதிச்ச பிடாரி )

Cool "களப ராஜராஜன்”   “ கள்வன் ராஜராஜன்”
என மெய்க்கீர்த்தி கல்வெட்டு இராண்டாம் இராசராச சோழனை களபர்-கள்வன் எனவும்

9) “ கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி விழவுடை விழுச்சீர் வேங்கடம்” (அகம்.61), மாஅல்யானை மறப்போர்ப் புல்லி காம்புடை நெடுவரை வேங்கடம்” என கல்லாடனார் வேங்கடமலைப்பகுதியை ஆண்ட புல்லியைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.

10) புதுக்கோட்டை மாமன்னர்கள் கள்ளர் குல  ஸ்ரீ பச்சை தொண்டைமான் மற்றும் அவரது வழியில் வந்த தொண்டைமான் மன்னர்களும். ( 300 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தார்கள்)

11 ) மதுரை கள்ளர் நாட்டு தலைவன் ஸ்ரீ திருமலை புன்னைத்தேவன்

14 ) சிவகங்கை கள்ளர் நாட்டு தலைவன் ஸ்ரீ வாளுக்கு வேலி அம்பலம்

15 ) சீவக சிந்தாமணி 741ம் செய்யுளில் உள்ள

“ கள்ளராற் புலியை வேறுகாணிய ” என்ற

தொடருக்க அரசனைக் கொண்டு சீவகனை போர் காண வேண்டி என்று பொருள் கண்டார் உச்சிமேற்புலவர் நச்சினார்கினியர் இங்கே கள்ளர் என்பதற்கு அரசர் என பொருள் கண்டார். சீவகனைப் புலி என்று கூறியதற்கு ஏற்ப அரசரைக் கள்ளர் என்றார் எனின் இங்கு வீரத்தின் மேம்பட்டார் என்று பொருள் படுகிறது. எனவே வீரம் எனும் பொருள் பற்றியே கள்வர், கள்ளர் என்ற பெயர்கள் தோன்றியதாகத் தெரிகிறது.

இதில் இருந்து சேர, சோழ, பாண்டிய மா மன்னர்களும், தொண்டைமான், புல்லி, முத்தரையர் போன்ற மன்னர்களும் பழந்தமிழ் இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் கள்வர், கள்ளர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.

கள்ளர் குடியினர் தம் இயற்பெயருடன் சுமார் ஈராயிரம் பட்டப் பெயரையும் கொண்டு விழங்குகின்றனர். உலக வரலாற்றில் ஈராயிரத்திற்கு மேல் பட்டப்பெயருள்ள எந்த சமுதாயமோ குடிகளோ இல்லை என்பதும் வரலாறு. இன்றைய நிலையில் பல பட்டங்கள் எதுவித மற்றமும் இன்றியும் சில பட்டங்கள் சிறிது மாற்றத்தோடும் கானப்படுகின்றன.

🌹 குறிப்புகள் -1 : அறிஞர்கள் கள்ளர்களை பற்கூரிய கருத்துக்கள்

1) முடியுடை மூவேந்தருள் சோழர்கள் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று பர்னலும், வெங்காசாமி ராவ் அவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.                  
2) மு. சீனுவாச அய்யங்கார் சோழரை சாதியில் கள்ளர் என்றும் பாண்டியரை மறவர் என்றும் குறிப்பார்.
                 
3) வின்சன் ஸ்மித் எனும் வரலாற்று அறிஞர் கள்ளரையும், பல்லவரையும் இணைத்துக் கூறுவார்.    

4) சர்.வால்டர் எலியட் கள்ளர்கள்களை கலகத் கூட்டத்தார் என்றும் அவர்கள் ஆண்மை, அஞ்சாமை, வீரம் முதலிய பண்பு மிக்கவர்கள் என்பார்.

5) கள்ளர்கள் நாகர் இனத்தவர்என்று அறிஞர் வி. கனகசபை பிள்ளை அவர்களும் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களும் கூறுவர்.

6) கள்ளர்கள் தமிழகத்தின் வீரமிக்க தனித்தமிழ்த் தொல் குடியினர் என்று மொழி ஞாயிறு பாவாணர் கூறுவார்.

7) "கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடியினர் " என்று வழக்கறிஞர் சுந்தரராசன் கூறுவார்.
மேலும் கல்லில் தோன்றியதால் கல்லர் என்று குறிப்பதே சிறப்பு என்பார் தமது தரணியாண்ட தமிழ் வள்ளல்கள் என்ற நூலில்.

Cool லம்பகர்னர் என்பவர்கள் கள்ளர்கள் - யாழ்ப்பாணக் குடியேற்றம் என்ற நூலில், கள்ளருடைய காதுகள் பாரமான காதணிகளுடன் தூங்கியிருப்பதைக்கண்ட சிங்களவர் பரிகாசமாக அவர்களை லம்பகர்னர் என்று அழைத்தனர். லம்பம் - தூங்குகின்ற, கர்னர் – காதுடைவர் என்பது அதன் பொருள், கள்ளர் மறவரைச் சார்ந்த “சாதியார். ஆவர்கள் கொள்ளை, கொலை , களவு முதலிய மறத்தொழிலைச் செய்யும் இயல்புடையவர். போர் புரிதலிலும் வல்லவர்கள் என்று “சேர் வால்றார் எலியெற்’ கூறியுள்ளார். ஆவர்கள் இலங்கையின் வடபகுதியை 200 வருடங்கள் ஆட்சி செய்தனர்.
https://kallarhistories.blogspot.com/2017/03/blog-post_25.html

Admin
Admin

Posts : 15
Join date : 24/07/2011
Age : 70
Location : P.U.C.

https://ennar.forumta.net

Admin likes this post

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum