ENNAR
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மன்னன் காந்தமன் காவிரி தண்ணீரைக் கொண்டு வந்தான்

Go down

மன்னன் காந்தமன் காவிரி தண்ணீரைக் கொண்டு வந்தான் Empty மன்னன் காந்தமன் காவிரி தண்ணீரைக் கொண்டு வந்தான்

Post  Admin Sat Apr 13, 2019 8:59 am

குடமுனி என்கிற குடகுமலை அகத்தியர் தமிழர் காலம் - B.C.6020
மலையமலைக்கு (Western Ghauts) அணித்தாகக் கீழ் பக்கத்தில் எருமை நாட்டிற்கும் (Mysore) வடக்கில், குடகுநாடு (Coorg) என்ற சிறிய சுதந்திரநாடு ஒன்று உள்ளது. அது கி.மு.6020 ல; கவேரன் என்ற அரசனால் ஆளப்பட்டு வந்தது. கவேரனுடைய மகள் காவேரி, தம் மகள் காவேரியை உருவினாலும், திருவினாலும் கல்வியானும், ஒழுக்கத்தானும், தவத்தானும் சிதறந்திருந்த அகத்தியர் என்பாருக்குக் கட்டிக் கொடுத்து, அவரையே தம் முதன் மந்திரியாகவும் வைத்துக்கொண்டான் கவேரன்.
இவ்வகத்தியரைக் குடகுமலை அகத்தியர், அல்லது. குடகுமுனி, அல்லது குடமுனி என்பர்  குடமுனி என்பது குடகுமுனி என்பதன் குறுக்கம். இக்கருத்தை அறியாதவர்கள் குடமுனியைக் கும்பமுனி ஆக்கி, கலசத்தில் பிறந்ததாகக் கூறும் ஆரியக் கதைகளோடு ஒன்றுபடுத்திப் பாடி விட்டார்கள் சில புராணங்களில்.
இவ்வகத்தியர் காலத்தில் கவேரனுடைய நாடு எல்லா விதத்திலும் வறம்பெற்று இருந்ததுடன் மொழிவளமும் பெற்று இருந்தது.
குடகுமொழி (கூர்கி என்றும் பெயர்) எழுத்தில்லாத மொழி. துளு - தோட முதலிய மொழிகளைப்  போல தமிழினின்றும் பிரிந்த ஒரு மொழி. இன்றும் அம்மொழிக்குத் தனி எழுத்துக்கள் கிடையாது. கன்னட மொழியின் எழுத்துக்களையே கொண்டு விளங்குகின்றது.
இவ்வகத்தியர் வடநாட்டில் இந்துஸ்தானத்தில் அக்காலத்தில் அரசாண்ட பரசுராமற்கு மிகவும் வேண்டியவர் இவர் ஆரியாவர்த்தத்துக்கு அடிக்கடி சென்று வருவார். ஆரியநாட்டு அரசர்கள் எல்லாரும் இவ்வகத்தியருக்கு நண்பர்கள். ஒருநாள் அயோத்திக்குப் போய்விட்டுத் திரும்புங்காலையில் நைமிசவனம் பக்கமாக வந்தார். அங்கே முனிவர்கள் பலர் அசமேதம் செய்ய ஓர் ஆட்டை யூபத் தம்பத்தில் கட்டி இருந்ததை இவர் பார்த்தார். பார்த்ததும் அந்த ஆட்டின் பரிதாப நிலையைக் கண்டு அம்முனிவர்களிடம் சென்று அந்த ஆட்டைக் கட்டவிழ்த்து விடும்படி கூறினார். அம்முனிவர்கள் "அசம்பெய் தவிசொரிந்தாற்றின் வானோர் --வசம்பெய் தருளின் மாநிலம் செழிக்கும்" என்றார்கள்.  அகத்தியர் அதுகேட்டு, அவரகளுடைய அறியாமைக்கு இரங்கி, அசம் என்னும் சொல்லுக்குப்பொருள் என்ன? என்று கேட்க, அவர்கள்"ஆடு" என்று சொல்ல, அது பொருளன்று; அசம் என்றால் 'மூவாட்டை நெல்' என்று பொருள் கூறி, அந்த யாகத்திற்குத் தான் தலைமை வகித்து, தமது குடகு ஆச்சிரமத்திலிருந்து பழைய மூவாட்டை நெல் (அதாவது மூன்று வருடத்திய நெல்) கொணர்ந்து, தமிழர் முறையில் வேள்வியை முடித்துக்காட்டினார். இந்திரன் முதலில் ஒப்பாமல் இருந்தான். இவ்வகத்தியர் அவனுக்கு வேள்வியைப்பற்றி விவரமாகக் கூறியபின் அவனும் ஒப்புக் கொண்டு யாகம் பூர்த்தி அடைந்தது.

திருவள்ளுவர் கி.மு.முதல் நூற்றாண்டில்,
"நன்றாகு மாக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை"

"அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று"
என்று கூறிய குறட்பாக்களின் கருத்தை 6000 ஆண்டுகள் முன்னரே இவ்வகத்தியர் மைமிசமுனிவர்களுக்கும் இந்திரனுக்கும் எடுத்துக்  கூறி அவர்களைச் சீர்திருத்தியுள்ளார். ஆதலின், பரசுராமர் முதற்கொண்டு ஆரியநாட்டு அரசர்கள் எல்லாம் இவ்வகத்தியரிடத்தில் நட்புப் பூண்டு இருந்தார்கள்.
கவேரன் குடகில் ஆட்சி செலுத்திக்கொண்டிருக்கும் போது, காந்தமன் என்னும் சோழன் புகார் நகரில் அரசு புரிந்து கொண்டிருந்தான்.
பரசுராமர் வடநாட்டு அரசர்களையெல்லாம் வென்று அடக்கியபின் தென்னாடுகள்மீது
படையெடுத்து வந்தார். இச்செய்தியை சேர - சோழ - பாண்டியர்களும் (திராவிடபூபன்) கவேரன் – கிருதபவன் வதுவாதிபன் - கருணன் முதலியோர் கேள்விப்பட்டு, கவேர அரசனுடைய முதன் மந்திரி அகத்தியரைக் கலந்து ஆலோசித்தார்கள்.
சரியான அரச குலத்தைச் சேர்ந்த அரசர்களையே பரசுராமர் எதிர்ப்பாரே அல்லாது, தாழ்ந்தவர்களிடம் செல்லமாட்டார், ஆதலின், புகார்ச்சோழன் காந்தமன் என்பவன் குடகுமுனியைக்  கலந்தபோது அவர்  சொற்படி தேசத்தைத் தன் காதற்பரத்தையின் மகனாகிய ககந்தனுக்குக் கொடுத்து, முடிசூட்டி, ஆளும்படி செய்துவிட்டு, தான் குடகுமலையில் மறைந்து வாசம் செய்துவந்தான்.
அப்படி மறைந்தொழுகும் காலத்தில்தான், காவிரி நதி குடகுமலையிலிருந்து மேற்கே
ஓடிக் கடலில் விழுவதைக் கண்டு, அதனைக் கிழக்கே ஓம்படி செய்தால் சோழநாடு வளம் அடையும் எனக் கருதி, குடகுமலை அகத்தியர் உதவிபெற்று, குடகுமலைநாட்டின் அரசனாகிய கவேரனுடைய அனுமதியின் பேரில், மலையை வெட்டி, ஊடறுத்துத், தன் நாட்டிற்குக் கொண்டு சென்றான்,
பரசுராமர் சோழநாடு வந்து புகாரில் பரத்தையின் மகன் அரசு செய்வதைப் பார்த்து,
போர் தொடுக்கவில்லை, பரசுராமர் பிறகு திருவாரூர் சென்று, தம் பெயரால் சிவலிங்கம் ஒன்று தாபித்து, வழிபட்டுவிட்டு ஏனைய நாடுகளிலும் சரியான அரசர்ட இல்லாததால் தம் நாட்டுக்குத் திரும்பிச்சென்றுவிட்டார், பரசுராமர் சென்றபின் காந்தமன் என்னும் சோழன் திரும்பிப் பட்டம் எய்தி, காவிரியைக் கொணர்ந்து, நாட்டை வளம்செய்து அரசு புரிந்தான்.
பரசுராமன் படையெடுப்பும் சோழநாட்டிற்கு நன்மையே பயந்தது என்னலாம், அவனுடைய  படையெடுப்பு இல்லாவிடில் காந்தமன் குடகுமலையைச் சுற்றிப்பார்க்கும் அமயம் ஏற்பட்டிருக்காது. காவிரியைச் சோழ நாட்டிற்குக் கொண்டு வந்திருக்கவும் முடியாது.

"செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும்
கஞ்ச வேட்கையில் கந்தமன் வேண்ட
அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை
செங்குணக் கொழுகியச் சம்பா பதியயல்
பொங்குநீர்ப் பரப்பொடு பொருந்தித் தோன்ற
ஆங்கினி திருந்த அருந்தவ முதியோன்"
(மணிமேகலை 1-15)
என்ற மணிமேகலை அடிகளாலும்,

"மேக்குயர்க்
கொள்ளுங் குடகக் குவடுஊ டறுத்திழியத்
தள்ளும் திரைப் பொன்னி தந்தோனும்"
(விக்.சோழ-உலா)
என்ற விக்கிரமசோழன் உலாக் கண்ணியாலும்,
"கோல்கொன்று
அலையெறியும் காவேரி யாற்றுப் படைக்கு
மலையெறியும் மன்னர்க்கு மன்னன்"
(குலோத்.சோழ-உலா)
என்ற குலோத்துங்க சோழன் உலாக் கண்ணியாலும்,

"முடுகிக்
கரையெறிந்த பொன்னிக் கடலேழுங் கோப்ப
வரையெறிந்த மன்னர்க்கு மன்னன்"
(இராச.சோழ-உலா)
என்ற இராசராச சோழன் உலாக்கண்ணியாலும், அறியக் கிடக்கின்றது. இன்னும்,

"...செயற்கரிய களவழிப்பா முன்செய்த ...........
பொய்கை ஒருவனாற் போந்தரமோ-சைய
மலைச்சிறைதீர் வாட்கண்டன் வெள்ளிணிநாள் வாழ்த்திக்
கொலைச்சிறைதீர் வேந்தும் குழாம்" (புறத்-6)
என்ற வெண்பாவில் "சையமலைச் சிறைதீர் வாட்கண்டன்" எனச் சோழன் கூறப்படுதானும்,
சையவரையின் குவட்டை ஊடறுத்துக் காவிரியைக் கொணரந்த செய்தி அறியலாகும்.

பரசுராமன் தென்னாட்டின்மீது படையெடுதது வந்த போது கவோர அரசனும் தன்னுடைய  தேயத்தைக் காவேரி அகத்தியரிடம் ஒப்புவித்து அரசாளும்படி விட்டுவிட்டுச் சையமலையில் காந்தமன் என்ற சோழனோடும், ஏனைய கிருதபவன் - வதுவாதிபன், கருணன் முதலியவர்களோடும் வாசம் செய்து வரலானான்.
குடகு மலையில் காவிரி உற்பத்தியாகும் இடம் தலைக்காவேரி என்று கூறப்படும். அந்த இடத்தைப் பார்வையிட்டவர்களுக்கு அந்த இடம் ஒரு குடம் கவிழ்த்த நீர் அளவு உள்ளதைக் காணப்பெருவியப்பு ஏற்படும். அனாலே தான் சீத்தலைச் சாத்தனார், "அமரமுனிவன் அகத்தியர் தாம் அரசு செய்யும போதே காவிரியாற்றை வெட்டுவதற்குச் சம்மதங்கொடுத்ததனாலேயே, கவேரன் பெயர் வராமல்  அகத்தியர் பெயர் வந்ததற்குக் காரணமாயிற்று
காந்தமன் புகாரைத் தன் காதற்பரத்தைதயின் மகன் காந்தனுக்குச் சிலகாலம் ஆளும்படி  கொடுத்த சரித்திரம்:-
"ககந்தனாம் எனக் காதலிற் கூஉய்
அரசாள் உரிமை நின்பால் இன்மையில்
பரசு ராமன் நின் பால்வந் தணுகான்
அமர முனிவன் அகத்தியன் தனாது
துயர்நீங்கு கிளவியின் யான்தோன் றளவும்
ககந்தன் காத்தல் காகந்தி என்றே
இயைந்த நாமம் இப்பதிக்குஇட்டு ஈங்கு
உள்வரிக் கொண்டவ் வுரவோன் பெயர்நாள்"
என்ற மணிமேகலை (22:32) அடிகளால் உய்த்துணரக் கிடக்கின்றது.

புகாருக்கு சம்பாபதி என்றும், ககந்தி என்றும் மறு பெயர்களுண்டு. அவைகளோடு, காவிரியாறு  புகாருக்குச் சமமீபத்திலேயே கடலிற் கலப்பதால் காவிரிப்பூம்பட்டினம் என்று பெயர் ஏற்பட்டது.
தென்னாட்டிலிருந்து வடநாடு சென்றதும். பரசுராமர் தசரதராமரால் தோல்விறார் என்று  இராமாயணம் கூறும், தோல்வியுற்றபின், பரசுராமர் வடநாட்டை விட்டுவிட்டு, 64 குடும்பங்களுடன்  சேரநாட்டை அடைந்து, சேர அரசனிடம் 64 கிராமங்கள் கேட்டுப் பெற்று, அங்கேயே தங்கிவிட்டார்
இச்சரித்திரத்தைச் சில மாறுதல்களுடன் கந்தபுராணம் - காசிகாண்டம் – திருக்குற்றாலப்  புராணம் - திருவேங்கடத் தலபுராணம் * திருநெல்வேலிப் புராணம் - குடந்தைப் புராணம் – மயிலைத் தலப்புராணம் - திருமறைக் காட்டுப் புராணம் முதலியவை எடுத்துரைக்கின்றன.

Admin
Admin

Posts : 15
Join date : 24/07/2011
Age : 70
Location : P.U.C.

https://ennar.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum